1. Home
  2. தமிழ்நாடு

நாளை புறநகர் ரயில் சேவை ரத்து!

Q

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்து பயணத்தை விட புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்வதையே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை புறநகர் மின்சார ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணத்துக்கு காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 மணிவரை இயக்கப்படும் 22 மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.05 முதல் மாலை 4.30 வரை இயக்கப்படும் 20 மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன. 

மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55. மதியம் 12.45, மதியம் 1.25. மதியம் 1.45 மதியம் 2.20. மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே காலை 9.30. காலை 9.40. காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like