1. Home
  2. தமிழ்நாடு

இன்று சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வரை புறநகர் ரயில் சேவை ரத்து!

1

மின்சார ரயில் சேவையில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். மேலும் மின்சார ரயில் சேவை பராமரிப்பு பணி அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவது வழக்கம். அப்போது தெற்கு ரயில்வே சார்பாக மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்படுகின்றது.

தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்டரல் கும்மிடிப்பூண்டி ரயில்கள் இன்று காலை 9.50 முதல் மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் கவனத்திற்கு; நாளை சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில்கள் ரத்து!

சென்னை சென்ட்ரல் பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரயில்கள் கணிசமாக இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் மின்சார ரயிலில் ஏசி பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வந்த நிலையில் ஏசி பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து.

தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்றது. மார்ச் மாதம் இறுதிக்குள் ஏசி மின்சார ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளைஞாயிறு விடுமுறை என்பதினால் மக்கள் தங்களது விடுமுறையை கொண்டாடுவதற்கு பல்வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம், அவர்களுக்காக சிறப்பு ரயில்கள் கணிசமாக இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like