1. Home
  2. தமிழ்நாடு

போலீஸ் வாகனத்தில் 'கட்டிங்' - உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்..!

1

போலீஸ் வாகனத்திலேயே சிறப்பு உதவி ஆய்வாளர் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் கைதியை சிறைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன்.இவர் மது அருந்திய வீடியோ வெளியானதால் இவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அந்த வாகனத்தில் பயணித்த மற்ற காவலர்களில் யாரேனும் இவரோ சேர்ந்து பணியின்போது மது அருந்தினார்களா என்றும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அப்படி மற்றவர்களும் மது அருந்தியது உறுதியானால் அவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like