1. Home
  2. தமிழ்நாடு

மிரளும் இந்தியா.. முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு !

மிரளும் இந்தியா.. முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு !

இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் முதலாவது அலை கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா முதல் அலையின்போது 2020 செப்.17ஆம் தேதி அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பு 98,795 ஆக இருந்ததும், 6 மாதங்களுகுப் பின் கொரோனா 2ஆவது அலையில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதும் கவனிக்கத்தக்கது.

மிரளும் இந்தியா.. முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு !

அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 1 லட்சத்து 03 ஆயிரத்து 249 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுதான் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,24,85,509-லிருந்து 1,25,89,067 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 478 பேர் பலியாகினர். நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,64,623-லிருந்து 1,65,101 ஆக அதிகரித்துள்ளது.

மிரளும் இந்தியா.. முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு !

கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 52,847 பேர் குணமடைந்தனர். நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,29,289-லிருந்து 1,16,82,136 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 7 லட்சத்து 41 ஆயிரத்து 830 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


newstm.in


Trending News

Latest News

You May Like