நாளை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் வழங்கப்படும் ..!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று அதாவது நாளை தமிழ்நாடு முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் நாளை ஜூலை 15ஆம் தேதி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட வகை வழங்குமாறும் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார்.
நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாடசாலை தொடங்க உள்ளதை அடுத்து பள்ளி செல்ல முடியாத ஏழை எளிய மாணவ மாணவிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.