1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களே இது உங்களுடைய நாள் : இன்று வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்..!

1

தமிழகத்தில்  10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும் எழுதியிருக்கிறார்ள். மேலும், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் ஆகியோரும் தேர்வுகளை எழுதியது உட்பட மொத்தமாக 8, 21, 057 பேர் தேர்வை எழுதியுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்திருக்கும் அறிவிப்பின் விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மார்ச் - 2025-ல் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு (,2 பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2025 (வியாழக்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.inwww.tnresults.nic.in என்ற இணையதள முகவரி  மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த எண்ணிற்கும், உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதிகமான வலைத்தள போக்குவரத்து காரணமாக, மாணவர்கள் தங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இணையத்தில் காண்பதில் சிரமத்தை எதிர்கொண்டால், SMS மூலமாகவும் அதை தெரிந்துகொள்ளலாம். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

- SMS வடிவம்: TNBOARD12REGNO, பிறந்த தேதி
- எடுத்துக்காட்டு: TNBOARD1212345, 01/01/2004
- 09282232585 அல்லது +919282232585 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்
- அதன் பிறகு தேர்வு முடிவுகளை உங்கள் மொபைல் போனில் SMS மூலம் பெறலாம்.

இதுதவிர படித்த பள்ளி, தொலைபேசி ஆகியவற்றின் வழியாகவும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வெழுதிய அனைவருக்கும் அவர்களின் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தனித்தனியாக அனுப்பி வைக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

Trending News

Latest News

You May Like