1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய கொடூரம்..!

Q

ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் புனிதா ஒரு மாணவி உட்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி இரண்டு மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்ததாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பில் பேசியதால் இவ்வாறு செய்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் புகாரளித்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பான விசாரணைக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எப்படி புகார் தெரியவந்தது?

கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. அதே பள்ளியில் பணியாற்றி வரும் மூன்றாம் வகுப்பு ஆசிரியை மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்டு இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து அவற்றை மாணவர்களின் பெற்றோர் செல்போனுக்கு அனுப்பி உள்ளார்.

புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றார்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று கேட்டு உள்ளனர். அதற்கு, உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் பேசிக் கொண்டு இருந்ததால் செல்லோ டேப் ஒட்டியதாக தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் புகைப்பட ஆதாரத்துடன். தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Trending News

Latest News

You May Like