1. Home
  2. தமிழ்நாடு

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டான்லி கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!!

1

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல் படுத்தப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

Next

நெக்ஸ்ட் தேர்வு படி 1 மற்றும் படி 2 என இரண்டு படிகளில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகளை கொண்டது. இதில் கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுகின்றனர். அதனைத் தொடர்ந்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும். இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும். வரும் 28-ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next

இந்நிலையில், மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள், கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசிடம் கலந்து பேசி தமிழ்நாடு அரசு நெக்ஸ்ட் தேர்வு ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like