பரமக்குடி அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்...!
ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதிகோட்டை அரசு தொடக்கப்பள்ளியில், இன்று காலை உணவாக மாணவ, மாணவியர்களுக்கு சேமியா உப்புமா மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது.
ஆனால் உணவு சாப்பிட்டதில், 9 மாணவ, மாணவியருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, வயிற்று வலியால் துடித்துள்ளனர். இவர்களை உடனடியாக, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்த நிலையில் இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.