1. Home
  2. தமிழ்நாடு

பள்ளியில் ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்..!

1

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அரசுப்பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்தர்புரா அரசு தொடக்கப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். பொதுவாக வகுப்பறையில் ஆசிரியர், மாணவர்களுக்கு பாடம் எடுப்பார். சில நேரம் கலகலப்பாக பேசலாம், கதை சொல்லலாம். ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோவில் பெண் ஆசிரியர் ஒருவர் குப்புற படுத்துக் கொண்டிருக்கிறார். அவரின் கால்களில் ஏறி மாணவர்கள் மசாஜ் செய்து கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. அந்த ஆசிரியரின் பெயர் ரேகா சோனி. பள்ளி வகுப்பறையில் இப்படியா நடந்து கொள்வது. இவர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுப்பார். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பெற்றோர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறினர்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர், வகுப்பறையில் இதுபோன்ற அநாகரீகத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சன்யுக்த் அபிபவாக் சங் கூறுகையில், கல்வித்துறை இதுபோன்ற பொறுப்பற்ற ஆசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கும் இந்த சம்பவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடின், மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய பெண் ஆசிரியர் ரேகா சோனி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சஸ்பென்சனில் உள்ள இந்த காலகட்டத்தில் ரேகா, பள்ளிக் கல்வித்துறை இயக்ககத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like