1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்கள் அலப்பறை.. அரசு பஸ்சை நடுரோட்டில் நிறுத்திச் சென்ற டிரைவர்..!

மாணவர்கள் அலப்பறை.. அரசு பஸ்சை நடுரோட்டில் நிறுத்திச் சென்ற டிரைவர்..!


கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பஸ் மூலம் வந்து செல்கின்றனர். இதில், சில உள் கிராமங்களுக்கு ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் தொங்கியபடியே பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

இவ்வளவு கூட்டம் ஏறினா வண்டி ஓட்ட முடியாது'.அரசு பேருந்தை நடுரோட்டில்  நிறுத்தி இறங்கி சென்ற டிரைவர் | TN bus driver stop govt bus on middle road  saying he could not run ...
இந்நிலையில், நேற்று மாலை மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக பாப்பாகுடி சென்ற அரசுப் பஸ்சில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்துள்ளது. இதனால், மாணவர்கள் படிகளில் தொங்கியபடியே பயணித்துள்ளனர். அவர்களை உள்ளே வரச்சொல்லி டிரைவர் பலமுறை சத்தமிட்டும், மாணவர்கள் தொங்கியபடியே பயணித்துள்ளனர்.

இதனால் பஸ்சை ஓட்ட முடியாமல் சிரமமடைந்த டிரைவர் ஆத்திரமடைந்து அரசு பஸ்சை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரை மணி நேரமாக சாலையிலேயே நின்றுகொண்டிருந்த பஸ்சால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டது.

பின்னர் வெகு நேரம் கழித்து அங்கு வந்த டிரைவர் பஸ்சை எடுத்து சாலையின் ஓரமாக நிறுத்தினார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் பஸ்சை இயக்கும்படி கூறியதன் பேரில் டிரைவர் பஸ்சை எடுத்தார்.

Trending News

Latest News

You May Like