கோவை ரோட் ஷோவில் மாணவர்கள் - பாரதிய ஜனதா மீது தேர்தல் விதிமீறல் புகார்..!
கோவையில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த ரோட் ஷோவில் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். இதை அடுத்து பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரோட் ஷோவில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்றும், எனவே பாஜகவினர் மற்றும் பிரதமர் மோடியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய கம்யூ. சார்பில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ரோட் ஷோ கோவை சாய்பாபா காலனியில் இருந்து தொடங்கி, கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று இறுதியாக ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைந்தது.