வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிர்பிழைத்த மாணவர் கூறிய அதிர்ச்சி தகவல்..!
கடலூர் பள்ளி வேன்-ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். ஒரு மாணவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அந்த மாணவர் விஸ்வேஷ் கூறியதாவது:
நாங்கள் எப்போதும் இந்த வழியாக தான் பள்ளிக்கு வேனில் செல்வோம். அதேபோல இன்று காலை 7:30 மணி அளவில் பள்ளிக்கு சென்றோம். என்னுடன் எனது சகோதரர் எனது வகுப்பில் உடன் படிக்கும் மாணவர் அவரது சகோதரி ஆகிய நான்கு பேர் வேனில் பயணித்தோம்.
எப்போதும், ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும், சிக்னலும் போடப்பட்டிருக்கும். ஆனால், இன்று ரயில்வே கேட் திறந்தே இருந்தது. இதனால், ரயில் வரவில்லை என்று வேனின் ஓட்டுநர் சங்கர் வேனை ஓட்டிச் சென்றார். ஆனால், திடீரென ரயில் எங்கள் பள்ளி வேன் மீது மோதியது. இதில், நான் வெளியே தூக்கி வீசப்பட்டேன்.
அப்போது, நான் மயக்கம் அடையவில்லை. ரயில்வே கேட் கீப்பர் அவருடைய அறையில் இருந்தார். விபத்து நிகழ்ந்த நேரத்தில் ரயில் வரும் சத்தம் கூட தங்களுக்கு கேட்கவில்லை. ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடவில்லை என்று தெரிவித்துள்ளார்.