தமிழகத்தை உலுக்கிய பரங்கிமலை ரயில் நிலைய மாணவி படுகொலை! டிசம்பர் 27ம் தேதி தீர்ப்பு..!
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.
இப்படித்தான் கடந்த 2022 ஆம் ஆண்டு கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யபிரியா வந்தார். அப்போது அங்கு சதீஷும் வந்தார். ரயில் வரும் வரை காத்திருந்த சத்யபிரியாவிடம் போய் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார்
அதற்கு சத்யபிரியா, "என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள். என்னால் உன்னை காதலிக்க முடியாது. என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு" என சொல்லியுள்ளார். ஆனாலும் சதீஷ் விடாமல் திரும்ப திரும்ப கேட்க, சத்யபிரியா மறுக்க சதீஷுக்கு கோபம் வந்துவிட்டது.
அந்த நேரம் பார்த்து ரயில் வந்தது. அப்போது சத்யபிரியாவை தள்ளிவிட்டார். இதனால் அந்த பெண் ரயில் மோதி இறந்துவிட்டார். இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 70 சாட்சிகளிடம் சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தி முடித்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நிறைவடைந்துள்ள நிலையில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இப்படி பெண்களை ஒரு தலைக்காதலால் அழிக்க நினைப்போருக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது.