1. Home
  2. தமிழ்நாடு

முதல்வரிடம் பரிசு பெற்ற மாணவி… ஆன்லைன் வகுப்பு புரியாமல் தற்கொலை!

முதல்வரிடம் பரிசு பெற்ற மாணவி… ஆன்லைன் வகுப்பு புரியாமல் தற்கொலை!


பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று தமிழக முதல்வரிடம் இருந்து பரிசு பெற்ற மாணவி ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சத்தியமூர்த்தி – தனலட்சுமி தம்பதியின் மகள் சுபிஷா.  மதுரையில் 10ஆம் வகுப்பு படித்து வந்த இவர்  கெட்டிக்காரர்.  

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதல் பரிசு வென்ற சுபிக்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரங்களால் பரிசு பெற்று பாராட்டப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பயின்று வந்த சுபிக்ஷா, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். ஆனால் ஆன்லைன் வாயிலான பாடங்கள் புரியவில்லை என்றும், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற முடியாது என்றும் அவர் குடும்பத்தினரிடம் கவலையை வெளிப்படுத்தியதாக சொல்லப் படுகிறது.

இந்நிலையில் அவர் சுபிக்ஷாவின் உடல், தாயின் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தினர் மீட்டுள்ளனர். சுபிக்ஷாவின் தற்கொலை குறித்து திருப்புவனம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like