தைவான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று (ஏப்ரல் 03) அதிகாலை 05.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹூவாலியன் நகரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பல மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இது ரிக்டர் அளவுக்கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தைவானின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதி மக்கள் உடனே அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.