1. Home
  2. தமிழ்நாடு

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு..!

Q

தைவானிலிருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள கிழக்கு நகரமான ஹுவாலினில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கியுள்ளன. இருப்பினும் என்ன மாதிரியான சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் இன்றும் வெளியாகவில்லை.

ஹுவாலினில் பூமிக்கு அடியில் சுமார் 9.7 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஏற்கெனவே மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது. அந்த வகையில் இது இரண்டாவது நிலநடுக்கமாகும். இதில், கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இருப்பினும் உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சுரங்க பாதைகளில் போக்குவரத்துகள் மிதமான வேகத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பூகோள ரீதியாக தைவான் நகரம் இரண்டு பூமி தகடுகளின் நுணியில் அமைந்துள்ளது. எனவே அடிக்கடி நிலநடுக்கத்திற்கு ஆளாகிறது.

Trending News

Latest News

You May Like