1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட ஒரு தீர்ப்பா ?ஆடைகளை கழற்றி நிர்வாணம் ஆக்குவது பலாத்காரம் ஆகாது..!

1

ராஜஸ்தான் டோங்க் மாவட்டத்தை சேர்ந்தவர் சுவலால். கடந்த 1991 ஆம் ஆண்டு சுவலால் தனது பகுதியில் வாட்டர் பூத் ஒன்றில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்த ஆறு வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்றுள்ளார்

மேலும் சிறுமியின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தியுள்ளார். அப்போது அச்சத்தில் சிறுமி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து சிறுமியை தூக்கி சென்று அத்துமீறலில் ஈடுபட முயன்ற சுவலால் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் பேரில் சுலாவல் மீது வழக்குப்பதிவு செய்யபப்பட்டது.

சுலாவால் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக டோங்க் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாவட்ட நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சுலாவல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். . 33 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்கு குறித்த தீர்ப்பில், சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துவது பாலியல் பலாத்கார முயற்சி கிடையாது. பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் குற்றம் ஆகும். எனவே சட்டப்பிரிவு 376 மற்றும் 511 பிரிவுகளின் கீழ் இந்த குற்றச்சாட்டு வராது.

பாலியல் பலாத்கார முயற்சி என்றால் அதையும் தாண்டி செய்து இருக்க வேண்டும். எனவே குற்றம்சாட்டப்பட்டவர் மீது மானபங்கப்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 இந்த தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like