1. Home
  2. தமிழ்நாடு

கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு.. மாநகர காவல்துறை அறிவிப்பு..!

கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு.. மாநகர காவல்துறை அறிவிப்பு..!


கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகளில் வர்த்தக ரீதியான புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் குடியிருப்பு சங்கங்கள் சார்பாக புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.

பொதுமக்கள் பொது வெளியிலும், சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஒன்றுகூட கூடாது. டிசம்பர் 31-ம் தேதி இரவு 9 மணி முதல் சென்னை காமராஜர் சாலை, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரையை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

31-ம் தேதி இரவு பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹோட்டல்கள், தங்கும் வசதியுள்ள உணவு விடுதிகள் டிசம்பர் 31-ம் தேதியன்று இரவு 11 மணி வரை மட்டு​மே செயல்பட அனுமதி.

கொரோனா வழிகாட்டு விதி முறைகளை முறையாக கடைப்பிடித்து, மற்றவர்களின் உணர்வுகள் புண்படாத வகையில் புத்தாண்டை கொண்டாட வேண்டும்’ என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like