தமிழகத்தில் உரிமம் இன்றி செயல்படும் மதுபானக் கடைகள் மீது கடும் நடவடிக்கை..!

மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்வோருக்கு தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளின் கீழ் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
உணவகங்கள், தாபா போன்ற சிறுக்கடைகளிலும் இதர இடங்களிலும் உரிமம் இல்லாமல் மதுவிற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், விதிகளை மீறி மதுபானம் செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.