1. Home
  2. தமிழ்நாடு

கொலை செய்தவர்கள் எந்த அரசியல் பின்புலத்தில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா!

Q

ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஒரு கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. கடந்த 3 மாதத்தில் 6 படுகொலைகள் நிகழ்ந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கொலை செய்தவர்கள் எந்த அரசியல் பின்புலத்தில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்

Trending News

Latest News

You May Like