ஸ்ட்ரெச்சருக்கு அலைக்கழிப்பு.. காலில் காயம்பட்ட தாயை தூக்கிச் சென்ற மகள்.!!
சாலை விபத்தில் காலில் காயமடைந்து நடக்க முடியாத நிலையில் தனது தாயாரை ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஒரு பெண்மணி.அவசர சிகிச்சை வார்டுக்கு கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஸ்ட்ரெச்சர் வழங்காமல் மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண், தனது தாயை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு சென்றார்.
தனது வயதான தாயை, பெண் தூக்கிச் சுமந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றதை மருத்துவமனையில் இருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சருக்கு அலைக்கழிப்பு..
— Adv Hemalatha Ganesan ( Modi Ka Parivar) (@Hemaganesanbjp) May 27, 2024
காலில் காயம்பட்ட தனது தாயை தூக்கிச் சென்ற மகள்.!! pic.twitter.com/RNa41n4OJB