1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சல்.. மேலும் ஒரு மாணவி சோகமுடிவு !

ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சல்.. மேலும் ஒரு மாணவி சோகமுடிவு !


தமிழகத்தில் நீட் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புக்கு எதிராக ஆசிரியர்கள், பெற்றோர், அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர். அதனை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே நீட்தேர்வு அச்சம் காரணமாக அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன

ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சல்.. மேலும் ஒரு மாணவி சோகமுடிவு !

இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாதாரண குடும்ப பிள்ளைகளிடம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க செல்போன்கள் இல்லை எனவும், மானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மனஉளைச்சலை தருவதாகவும் புகார் கூறப்படுகிறது.

ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்றும், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள செல்போன் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும் மன உளைச்சலால் சில மாணவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டனர்

ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சல்.. மேலும் ஒரு மாணவி சோகமுடிவு !

இந்த நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த ஈரோடு மாவட்டம் நஞ்சை புளியம்பட்டி சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்த மாணவி ஹேமாமாலினி என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like