கட்டியுடன் போராடிய தெரு நாய் - சுரேஷ் கோபி உதவிக்கரம்
கேரளாவில் கருப்பை கட்டியுடன் போராடிய தெரு நாய்க்கு, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உதவியால், சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலங்கு நல ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று சுரேஷ் கோபி உதவிக்கரம் நீட்டினார். அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் நாய் கண்ணூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாயின் சிகிச்சைக்கான முழு செலவையும் சுரேஷ் கோபி ஏற்றார்.