1. Home
  2. தமிழ்நாடு

வினோத சம்பவம்..! உடலுறவு இல்ல, IVF சிகிச்சை இல்ல! குழந்தை பெற்றெடுத்த பெண்!

Q

உடலுறவில்லாமல் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிசயத்தை நிகழ்த்தியவர், 36 வயதான மார்க்கெட்டிங் மேலாளர் தான்யா பென்னட் ஆவார்.

இங்கிலாந்தில் பெண் ஒருவர் உடலுறவு இல்லாமல், IVF சிகிச்சை இல்லாமல் குழந்தை பெற்றுள்ளார். 

தன்யா, கடந்த உறவுகளில் ஏற்பட்ட வேதனைகள் மற்றும் கருச்சிதைவுகளால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். தாயாக முடியாதென்று நம்பிய அவர், தனது ஆசையை நிறைவேற்ற IVF சிகிச்சை போன்ற செலவான வழிகளைத் தவிர்த்து ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுத்தார்.

தனது நெருங்கிய நண்பரின் விந்தணுவை கால்போல் சிரிஞ்ச் மூலம் தானாகவே உடலில் செலுத்திய தான்யா, மருத்துவ உதவியின்றி கர்ப்பம் அடைந்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது சுகாதார ரீதியாக அரிதாகவும் மருத்துவ உலகில் சாதாரணமாக நடக்காத முறையாகவும் பார்க்கப்படுகிறது.

IVF சிகிச்சை லட்சக்கணக்கான செலவுகள் தேவைப்படும் சூழலில், தான்யா எடுத்த தீர்மானம், பல பெண்களுக்கு ஓர் ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் தரும். அவரது முயற்சி, தாயாகும் கனவை சாதனையாக மாற்றும் நம்பிக்கையை அதிகரிக்கிறது.

தற்போது தான்யா தனது குழந்தையை தனியாக வளர்த்து வருகிறார். “என் மகன் தந்தையைப் பற்றி கேட்டால், நான் உண்மையைத்தான் சொல்வேன். ஒரு உறவுக்காக காத்திருக்காமல், குழந்தையை பெற்றெடுப்பது சுதந்திரமும் மகிழ்ச்சியும் தரும்,” என தான்யா உருக்கமாக கூறுகிறார்.

உலகம் முழுவதும் பல பெண்களுக்கு தாயாகும் கனவு இருக்கின்றது. தான்யா எடுத்த வித்தியாசமான தீர்மானம், பெண்கள் தாங்களாகவே வாழ்க்கையை முன்னேற்ற முடியும் என்பதை நிரூபிக்கிறது. தற்போது இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. உடலுறவு இல்லாமல் கர்ப்பம் அடையலாம் என்ற சாத்தியக்கூறுகள் குறித்து பலர் விவாதித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like