சிம்பு பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான STR 48 ஃபர்ஸ்ட் லுக்!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக சொல்லப்பட்ட படம் சரித்திரப் பின்னணியில் தயாராகிறது. இதில் முற்றிலும் வித்தியாசமான இருவேடங்களில் சிம்பு நடிக்கிறார். தற்போது இதன் ஃப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. 30 கிராபிக்ஸ் டிஸைனர்கள் இந்தப் படத்துக்காக பணிபுரிகின்றனர். பிப்ரவரி 3 சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படம் குறித்த புதிய அறிவிப்பு அல்லது போஸ்டர் வெளியிட திட்டமிட்டனர்.
இந்நிலையில்தான், இந்த படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது. சிம்புவுக்கு நாளை 3ம் தேதி பிறந்தநாள் என்பதால் அவரின் ரசிகர்களை குஷிப்படுத்த இந்த போஸ்டர் வெளியாகியிருக்கிறது.ஆங்கிலத்தில் வெளியான 300 படத்தின் போஸ்டரை போல இதை டிசைன் செய்திருக்கிறார்கள். இந்த போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்
இப்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அன்புத் தம்பி @SilambarasanTR_ அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.#STR48 #BLOODandBATTLE@desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/SnqR4dU84x
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2024