புயலுடன் வந்த பகீர் வார்னிங்..! நவம்பர் மாதத்தல் 123% மழை பொழிவு அதிகமாக இருக்கும்..!
இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் மாதத்திற்கான மழை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 123 சதவீதம் அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் நவம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. நவம்பர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123 சதவீதம் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழை நவம்பர் மாதத்தில் பெய்யும் எனவும் இந்திய மாநில மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தமிழகத்தில் இயல்பான அளவு மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்புக்கு குறைவான அளவில் மழை பதிவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இரண்டாவது வாரத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இயல்பை விட 23 சதவீதம் அதிகமாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நவம்பர் முதல் வார இறுதியில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.