ஃபெஞ்சல் புயல்..! ஒருவர் உயிரிழப்பு..!
பெஞ்சல் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், கிண்டி, கத்திபாரா, அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், பிராட்வே பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்., ல் வட மாநில வாலிபர் சந்தன் என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கு அவர் கை வைத்த, கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
அவர் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்தையால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.