1. Home
  2. தமிழ்நாடு

இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம் !! டாக்டர் இறுதி சடங்கு குறித்து கமல் டிவிட்

இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம் !! டாக்டர் இறுதி சடங்கு குறித்து கமல் டிவிட்


தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. சென்னையில் இதுவரையில் 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்ய, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சிலரை போலீசார் கைது செய்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அதிகாரிகளும் ஊழியர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை எரிப்பதனால் கொரோனா வைரஸ் பரவாது என சென்னை மாநகராட்சியும் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எரிப்பதை தடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருபவர்களைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது ;

கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து,இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள், எனத் தெரிவித்துள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like