1. Home
  2. தமிழ்நாடு

சென்னையிலும் வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு.. நொறுங்கிய ஜன்னல் கண்ணாடிகள்..!

1

தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வழியாக மைசூர் வரையிலும், சென்னையில் இருந்து கோவைக்கும் என இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று அதிகாலை சென்ட்ரல் நடைமேடைக்கு வந்தது. அப்போது ரயிலில் ஏறிய பயணிகள் ரயிலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளே கற்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பின்னர் புதிய கண்ணாடிகள் மாற்றப்பட்டு வழக்கம்போல் காலை 5.55 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. கடந்த புதன்கிழமை அன்று உத்தரபிரதேசத்தில் ஆடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதியதால் ஏற்பட்ட கோபத்தில் கற்கள் வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like