தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை : அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
- மழை நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்;
- பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 15,500 மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்;
- மின் வாரிய அலுவலகங்களுக்கு வரும் அழைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
- மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ள இடங்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது;
- மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு மையங்களில் மின்சாரத்துறை ஊழியர்கள் களப்பணியாற்ற உள்ளனர்;
- கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது
- புயலை எதிர்கொள்ளும் வகையில் மின்வாரியத்தை பொறுத்தவரை தயார் நிலையில் உள்ளது”