இஸ்ரேலில் உள்ள இந்திய மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்! வெளியுறவு அமைச்சகம் 'அலர்ட்'..!
காசா போர், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதல் போன்றவற்றுக்கு பழிதீர்க்க இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருக்கிறது. ஈரானில் இருந்து 400க்கும் அதிகமான ஏவுகணைகள் வானில் வீசி குண்டுமழையை தொடங்கி உள்ளதால் இஸ்ரேல் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் சேத விவரங்கள் பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இஸ்ரேல் மீதான ஈரானின் இந்த அதிவேக தாக்குதலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;
உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தும் பாதுகாப்பான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டில் எங்கும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தூதரகம் அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அவசரம் என்றால் அதற்காக கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை பயன்டுத்தலாம்:
+972-54520711+972-543278392
மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in
இந்தியர்கள் யாரேனும் இன்னமும் தூதரகத்தில் பெயர்களை பதிவு செய்யவில்லை என்றால் https://forms.gle/ftp3DEXgJwH8XVRdA என்ற இணைப்பை பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.