1. Home
  2. தமிழ்நாடு

மாநில அரசு அதிரடி..! பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை!

1

காய்ச்சல் உள்ளிட்ட ஆரம்ப அறிகுறி நேரங்களில் மக்கள் பலர் மருத்துவரை கேட்காமலே கூட மருந்தகங்களில் பாராசிட்டாமல் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை மருந்தகங்களில் விற்கும் மருந்துகளை பரிசோதனை செய்ததில் ஆபத்தான மருந்துகள் என 14 மருந்துகளை தடை செய்துள்ளது

அதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் Pomol 650 (Paracetamol IP 650 mg) மாத்திரை தடை செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சோடியம் லாக்டேட் ஊசிகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை சேமிக்கவோ, விற்கவோ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மக்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தினார். இந்த மருந்துகள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இது குறித்து அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மேலும் கூறுகையில், "இந்த மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தரச் சோதனையில் தோல்வியடைந்துள்ளன. அனைத்து மருந்துக்கடை உரிமையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் உடனடியாக இவற்றை விற்பனை செய்வது, பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். உங்களிடம் கையிருப்பு இருந்தால் உள்ளூர் அதிகாரிகளிடம் இது குறித்துத் தெரிவிக்கவும். விதியை மீறி இதை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

அனைத்து மருந்துக்கடை உரிமையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், மருத்துவ நிறுவனங்கள் உடனடியாக இந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் கையிருப்பில் இருந்தால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த மருந்துகள் எல்லாம் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரத்தையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் பாராசிட்டமால், அயர்ன் சுக்ரோஸ் இன்ஜக்ஷன் உட்பட 15 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்த மருந்துகளில் எந்த பேட்ச் பரிசோதனை செய்யப்பட்டன என்பது உள்ளிட்ட விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தடை விதிக்கப்பட்ட மருந்துகள்:

  • காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி.
  • காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி. ஆர்எல்
  • போமோல்-650 (பாராசிட்டமால் மாத்திரை 650 மி.கி.)
  • மிடோ க்யூ7 சிரப்
  • கோழிகளுக்கு செலுத்த பயன்படுத்தப்படும் எண்.டி., ஐ.பி., ஐ.பி.டி. தடுப்பூசி
  • ஸ்ப்னிஃப்ளாக்ஸ் ஓஇசட் மாத்திரைகள்
  • பான்டோகாட் - டிஏஆர்
  • சோடியம் க்ளோரைடு ஊசி ஐ.பி. 0.9
  • ஆல்பா லிபோயிக் சத்து மாத்திரைகள்
  • பைராசிட் - ஓ சஸ்பென்ஷன்
  • கிளிமிஸ் - 2
  • அயன் (இரும்பு) சுக்ரோஸ் ஊசி யுஎஸ்பி 100 மி.கி. (இரோகெய்ன்)
  • சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி.
  • ஓம் சாந்தி கோல்டு கிளாஸ் குங்குமம்

சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like