1. Home
  2. தமிழ்நாடு

ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீன் எதிரொலி : கேண்டீன் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

1

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கேண்டீனில் உணவுகளை எலி தின்ற வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி இவ்வாறு நடக்காமல் இருப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட வட்டார மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கேண்டீன்கள் தொடர்ந்து முறையாக, சுத்தம் செய்யப்பட வேண்டும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும், உணவகங்களுக்கு அருகே உள்ள துளைகள், சாக்கடை, கால்வாய்கள் போன்றவற்றை முழுமையாக அடைக்க வேண்டும்.

நாய்கள், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகள், பறவைகளை உணவக வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமைக்கப் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவுகளை கையாளுபவர்கள் கட்டாயம் கையுறை அணிவதுடன் தலைமுடி உதிராமல் இருக்க தலையுறை அணிய வேண்டும். உணவு கையாளுபவர்கள் கைகளை எப்போதும், சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; கைகளில் கிருமிநீக்கம் செய்ய வேண்டும். உணவு கையாளுபவர்கள் புகைப்பிடித்தல், எச்சில் துப்புதல், மெல்லுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like