1. Home
  2. தமிழ்நாடு

மதுரையில் தொடங்கியது முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ!

Q

தி.மு.க., மாநில பொதுக்குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடக்கிறது. இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலையில் பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கி.மீ., தொலைவுக்கு நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி துவங்கியது

பெருங்குடி சந்திப்பிலிருந்து 'ரோடு ஷோ' நடக்கும் அவனியாபுரம், மருதுபாண்டியர் சிலை, பெரியார் சிலை, வில்லாபுரம் ஆர்ச் வரையுள்ள ரோடு, ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, ஜீவாநகர் சந்திப்பு, சந்தராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்., நகர் மேம்பாலம், மாடக்குளம் சந்திப்பு, ஜி.ஆர்.டி., ஓட்டல் ரோடு, பழங்காநத்தம், ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல் சந்திப்பு, குரு தியேட்டர் சந்திப்பு வரையுள்ள திண்டுக்கல் ரோடு, ஆரப்பாளையம் வரை திறந்த வாகனத்தில் நின்றபடி சென்று மக்களை சந்திக்கும் முதல்வர், சாலையில் இறங்கி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்க உள்ளார்.

இதனையடுத்து அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Trending News

Latest News

You May Like