இன்று 6 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..!
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (25.07.2025) மாதவரம் மண்டலம், வார்டு-31ல் பி.ஆர்.எச். சாலையில் உள்ள எம்.பி. திருமணம் & கன்வென்ஷனல் மையம், இராயபுரம் மண்டலம், வார்டு-62ல் சிந்தாதரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆறு சாலையில் உள்ள எஸ்.கே.எம். மஹால், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-69ல் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள பத்மேடு நாடார் சத்திரம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-112ல் புலியூர், 2வது பிரதான சாலையில் உள்ள டிரஸ்ட்புரம் விளையாட்டுத் திடல், பெருங்குடி மண்டலம், வார்டு-189ல் பள்ளிக்கரணை, துலுக்காத்தம்மன் கோவில் பிரதான சாலையில் உள்ள எஸ்.எஸ்.மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-196, ஒக்கியம்பேட்டை, மாதா கோயில் தெருவில் உள்ள கிரியேட்ஸ் பார்ட்டி ஹால் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.