பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கான ரூ. 2,152 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி நிதியை விடுவிக்க வேண்டும். தமிழகத்தின் கல்வி, சமூக சூழலில் இரு மொழி கொள்கை நீண்ட காலமாக வேரூன்றி உள்ளது. நிதி விடுவிக்கப்படாததால் மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், கல்விக்கான நிதி வழங்கப்படாமல் உள்ளது.
கூட்டாட்சி தத்துவம்
நிதி வழங்கும் விவகாரத்தில் அழுத்தம் தருவது கூட்டாட்சி தத்துவத்தை மீறும் செயல். இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். இருமொழிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர உத்தேசிப்பது தமிழக மக்களுக்கு பயன் அளிக்காது. இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம். இருமொழிக் கொள்கை, சமூக நீதியின் அடிப்படையில் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.