1. Home
  2. தமிழ்நாடு

அதானி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் திருப்திகரமாக இல்லை - பா.ம.க., வெளிநடப்பு..!

1

தமிழகத்தில் அதானி குழும முதலீடு தொடர்பாகச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் அப்போது பேசியது, அதானி முதலீடுகுறித்து பொதுவெளியில் வரும் தகவல்குறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அதற்குப் பிறகும், இதுபற்றிச் செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதானி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம்குறித்து விவாதிக்க வேண்டும் என்று பார்லிமென்டில் இண்டியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

தி.மு.க., மீது குறை சொல்லிக் கொண்டு இருக்கும் பா.ஜ., வோ, பா.ம.க., வோ, பார்லிமென்டில் இந்தக் கோரிக்கை ஆதரிக்கத் தயாராக இருக்கிறதா? இந்தக் கேள்வியை மட்டும் நான் கேட்க விரும்புகிறேன். இப்போதும் சொல்கிறேன். தமிழகத்திற்கும் அதானிக்கும் எந்த வித சம்மந்தமும் கிடையாது. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை. நான் அவரைப் பார்க்கவும் இல்லை. இதைவிட வேற விளக்கம் தேவையா ?

விசாரணை குழு

ஏற்கனவே இதை நான் பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். இதுகுறித்து பார்லிமென்டில் இன்னைக்கு இருக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம், ஆளும் பி.ஜே.பி., ஆட்சியைப் பார்த்து, விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை ஆதரித்துப் பேச நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இதுதான் நாங்கள் எதிர்பார்ப்ப கூடியது ஆகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

பா.ம.க., வெளிநடப்பு

சட்டசபையில், அதானி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் திருப்திகரமாக இல்லையெனக் கூறி, பா.ம.க., வினர் வெளிநடப்பு செய்தனர்.

Trending News

Latest News

You May Like