இன்று முதல்வர் ஸ்டாலின் - திருமாவளவன் சந்திப்பு..!
விசிக சார்பில் நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கு பெற வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக விற்கு அழைப்பு விடுத்திருந்தார் திருமாவளவன். மேலும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அவரது கட்சி சார்பில் எக்ஸ் வலை தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து திருமாவளவனிடம் கேட்ட போது அட்மினிடம் தான் கேக்க வேண்டும்.. என்று கூறியிருந்தார். பிறகு நேற்று மாலை திருமாவளவன் பேசிய முழு வீடியோவும் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவன் துணிந்து விட்டாரா?... அதிமுக அல்லது விஜயின் தவெக கட்சிகளுடன் இணைய ஆயத்தமாகி வருகிறாரா? என்றெல்லாம் கூட அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று (16ம் தேதி) காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று (16ம் தேதி) காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..