தேர்தல் வெற்றியை கலைஞர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன் - முதல்வர் ஸ்டாலின்..!
அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற முடியாமல் தள்ளப்பட்டுள்ளது பாஜக. கடந்த முறை 39ல் வெற்றி பெற்ற நாம் இம்முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம்,
பாஜகவின் பண பலத்தை உடைத்துள்ளோம். திமுக கூட்டணிக்கு வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது, தேர்தல் வெற்றியை கலைஞர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன். வாக்களித்த அனைவருக்கும் நன்றி, இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க நாளை டெல்லி செல்கிறேன்” என்றார்.