1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!

Q

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.
தில்லியில் உள்ள இல்லத்தில் மன்மோகன் சிங்கின் உடல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக சனிக்கிழமை காலை மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மன்மோகன் சிங்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி சென்றார்.
மன்மோகன் சிங் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி
டெல்லியில் மன்மோகன் சிங் உடலுக்கு ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், கருணாநிதியுடன் நெருங்கி பழகிய மன்மோகன் சிங், தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை தந்தவர். மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாட்டிற்கு வரவும், தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கவும் முக்கிய காரணமாக இருந்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், காங்., கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like