முதல்வருக்கு போட்டி… செருப்பு போடாமல் வயலில் இறங்கிய ஸ்டாலின்!

வேளாண் சட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரத்தில் போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செருப்பு போடாமல் வயலில் இறங்கி நடந்து சென்றார்.
வேளாண் சட்டத்திற்கு திமுக தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மு.க.ஸ்டாலின், பச்சைத் துண்டு, பச்சை நிற மாஸ்க் அணிந்தபடி கலந்து கொண்டார்.
போராட்டம் தொடங்குவதற்கு முன்பு வயல் வெளியில் செருப்பு போடாமல் ஸ்டாலின் நடந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் போது ஸ்டாலினுக்காக வயலில் கான்கிரீட் போடப்பட்டது பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், விவசாயி என்றும் கூறிவரும் முதல்வருக்கு எதிராக ஸ்டாலினும் களத்தில் இறங்கியுள்ளார்.
மேலும் கூட்டத்தில் பேசிய அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போலி விவசாயி என்று விமர்சனம் செய்தார். மேகதாது அணை விவகாரம், எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு குரல் கொடுக்காத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்கிறார் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
newstm.in