1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்? அமைச்சர் மா.சு வெளியிட்ட தகவல்..!

Q

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென்று நேற்று முன்தினம் உடல்நல குறைபாடு ஏற்பட்டது. லேசான தலைசுற்றலால் அவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது.

 

இதையடுத்து நேற்று 2வது நாளாக முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு தேனாம்பேட்டை அப்போலோவுக்கு நேற்று காலையில் முதல்வர் ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக அவர் காரில் அமர்ந்து மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பரிசோதனைகள் முடிந்த பிறகு மீண்டும் அவர் கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்டாலின் இருக்கிறார்.

 

இந்நிலையில் தான் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஸ்டாலினை மருத்துவமனையில் சந்தித்தார். அதன்பிறகு அவர் கூறுகையில், "முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். இன்று (நேற்று) காலையில் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் அதற்கான அறிக்கையை அளிப்பார்கள். முதல்வர் நலமுடன் இருக்கிறார். 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதல்வர் விரைவில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்'' என்று கூறினார்

 

இந்நிலையில் அப்பலோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் எனும் தகவல் இன்று வெளியிடப்படும் என  அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சகோதரர் மு.க.முத்து மறைவால் முதல்வர் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்துள்ளார் எனவும் அமைச்சர் கூறினார் 

Trending News

Latest News

You May Like