கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்.. 7வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு ஸ்டாலின் கண்டனம் !

கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்.. 7வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு ஸ்டாலின் கண்டனம் !

கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்.. 7வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு ஸ்டாலின் கண்டனம் !
X

அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நாகூரான், செல்வி தம்பதியின் ஏழு வயது மகள், அவர்களது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொடூரத்திற்கு ஆளான சிறுமியின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
 
இந்தச் சம்பவத்திற்குக் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது. இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in 

Next Story
Share it