1. Home
  2. தமிழ்நாடு

இயக்குநர் நெல்சனுக்கு பாராட்டு தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

1

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது.தமிழகத்தை பொறுத்தவரை 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 3500-க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

இப்படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும் ஜாக்கி ஷெராப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜெயிலர்' படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சனை சந்தித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இது குறித்து இயக்குனர் நெல்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜெயிலர் திரைப்படத்தை பார்த்ததற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. நடிகர்கள் மற்றும் குழுவினர் உங்கள் வார்த்தைகளால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like