1. Home
  2. தமிழ்நாடு

மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்க்கொண்டு ஹிந்துக்களுக்கு மட்டுமே விரோதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் - எச்.ராஜா குற்றச்சாட்டு!

1

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவையில் 58 அப்பாவி ஹிந்துக்களை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்த கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அல்உமா பாஷாவின் மரணத்தை தொடர்ந்து 2000 காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்தது என்றும்  தமிழகத்தின் பெருநகரங்கள் தோறும் கலாச்சார சீரழிவுக்கும், போதைப்பொருள் பரவலாக்கலுக்கும் வழிவகுக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கும் தமிழக காவல்துறை என்று எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான PFI இயக்கத்துக்கு ஆதரவாக விசிக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்த மாநிலம் முழுவதும் அனுமதி அளித்த தமிழக காவல்துறை, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ஷாகீன் பாக் என்கிற பெயரில் கூடாரம் அமைத்து பல நாட்கள் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர் போராட்டம் நடத்த தமிழக காவல்துறை அனுமதி அளித்தது என்று எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் அயோத்தியாபட்டினத்தில் ராம நவமி தினத்தன்று ராம ரத யாத்திரை நடத்த ராம பக்தர்களுக்கு காவல்துறையும், தமிழக அரசும் அனுமதி மறுப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்க்கொண்டு ஹிந்துக்களுக்கு மட்டுமே விரோதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலினின்  திராவிட மாடல் அரசு. மண்ணின் மைந்தர்களான ஹிந்துக்களை அகதிகள் போல நடத்தும் தமிழக அரசின் ஹிந்து விரோத போக்கும் தமிழக காவல்துறையின் ஹிந்து விரோத நடவடிக்கைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like