ரூ.70 கோடி மதிப்பீலான அரசு உதவி நலத்திட்டங்களை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்..!
ராமநாதபுரம் மாவட்டம் பகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேலான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுட கடல் பகுதியில் ஆழ்கடலில் விசைப்படகு, நாட்டு படகு, பாய்மரப்படகு, கட்டு மரம் படகு, தர்மாகோல் படகு போன்ற படகுகளில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு உயிர்களையும்,பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மீனவ மக்கள் அதிகமான உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்பதற்கு திட்டமிட்டு இருந்தார். அதன் பேரில் மண்டபம் அருகே மண்டபம் கேம்ப் மற்றும் மரக்காயர் பட்டிணம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மீனவர்கள் மாநாடு நடத்துவதற்கு அரசு சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்ற வருகிறது. ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கு மேலான மீனவர்கள் அமரும் அளவிற்கு பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள மீனவர்கள் மாநாட்டிற்கு காலை 9 மணிக்கு தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். அங்கு மீனவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும், பயனாளிகளுக்கும் அரசு நல உதவித் திட்டங்களை வழங்குகிறார். இதனை தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிகிறார். இந்த மீனவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏறத்தாழ ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் உள்ள மீனவ குடும்பங்கள் ஒரு லட்சத்திற்கும் மேலாக வருகை தர உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்டம் மீனவ சங்க கூட்டமைப்பு தலைவர்கள் செய்து வருகின்றனர்.
முன்னதாக ராமந்தாபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் மீனவர் மாநாடு நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து தெரிவித்ததாவது., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் 4,184 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ரூ.24.26,28.315 மதிப்பீட்டிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 1,299 பயனாளிகளுக்கு மானியத்தில் சூரை மீன்படகு கட்டுதல் மற்றும் பி.எம்.எம்.எஸ்.ஒய் திட்டங்கள், கிசான் கடன் அட்டை, கடற்பாசி வளர்ப்பு, மீனவர் நல் வாரிய அட்டை(ஸ்மார் கார்டு ) ரூ.3.92.80,294 மதிப்பீட்டிலும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மூலம் புதிய தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.30,98,000/- மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் மூலம் 1,152 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன் கே.சி.சி கடற்பாசி வளர்ப்பு கடன் ரூ.5,43,75,000 மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் துறையின் மூலம் 6608 பயனாளிகளுக்கு கூட்டுப் பொறுப்பு குழுக்கடன் மகளிர் சுய உதவிக் குழு கடன், துயர் குறைப்பு நிதி ரூ.30,82,51,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 13,244 பயனாளிகளுக்கு ரூ.70,76,32,609 மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலவர் மு.க.ஸ்டாலின் சிறப்பிக்க உள்ளார் என தெரிவித்தார்.
மாநாட்டு பந்தலில் தமிழக அரசு மீனவர்களுக்கு செய்து வரும் நல உதவி திட்டங்களை குறித்து விளம்பர பதவியும் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் அமர்வதற்கு தனிப் பகுதியும், அரசு அதிகாரிகள் அமர்வதற்கு தனிப்பகுதியும், சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்கு தனிப்பகுதியும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்கு தனிப்பகுதியும், திமுக கட்சியினர் அமர்வதற்கு தனிப்பகுதியும், மீனவர்கள் அமர்வதற்கு தனிப்பகுதியும், பயனாளிகள் அமர்வதற்கு தனிப்பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு பந்தலில் கலர் தோரணங்கள் மற்றும் வரவேற்பு முகப்பில் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் முக்கிய அம்சமான கலங்கரை விளக்கம் கொண்ட விளம்பர பதகையை வைக்கப்பட்டுள்ளது பிர பிரமாண்டமான மாநாடு நடைபெற இருப்பதால் அந்த பகுதியே திருவிழா போல் காட்சியளிக்கின்றன.