1. Home
  2. தமிழ்நாடு

கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலினும் அழகிரியும் சந்திப்பு... அதுவும் 5 ஆண்டுகள் பிறகு..!

1

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (90). இவர், கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான மு.க.அழகிரி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தனித்தனியாக நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.

MKS

இந்த நிலையில் நேற்று தயாளு அம்மாளுக்கு 90-வது பிறந்தநாள் என்பதால் கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார்கள். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவரது அண்ணன் மு.க.அழகிரியும் தனது மனைவி காந்திமதி உடன் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற இல்லத்திற்கு வருகை தந்தார். அதேபோல் தம்பி மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன், அமிர்தம் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். இவர்களுடன் அமைச்சர் உதயநிதி, நடிகர் அருள்நிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


 


இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். தயாளு அம்மாள் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் பேசி கொண்டனர் என்றும் மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் எப்போது சண்டையிட்டனர், சமாதானம் ஆவதற்கு? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Trending News

Latest News

You May Like