1. Home
  2. தமிழ்நாடு

மேடை நாடக கலைஞன் to மக்களின் முதல்வன்.. மறக்க முடியாத எம்ஜிஆர் நினைவுகள்..!

1

திரை சினிமாவில் உச்சம் தொட்ட எம்.ஜி.ஆர், அரசியலிலும் எவ்வாறு உச்சம் அடைந்தார் என்பதைக் காண்போம்.,

"புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், கொடுத்து கொடுத்து சிவந்த கை, கொடை வள்ளல், வாத்தியார் என்ற பல்வேறு பெயர்களைக் கொண்டவர் எம்.ஜி.ஆர்.

யார் இந்த எம்.ஜி.ஆர்?

ஆங்கிலேயரின் ஆட்சியின்போது இலங்கையின் கண்டி மாவட்டத்திலுள்ள நாவப்பிட்டி என்னும் கிராமத்தில் கோபாலன் மேனனுக்கும், மருதூர் சத்தியபாமாவுக்கும் 1917 ஜனவரி 17ஆம் தேதி மகனாகப்பிறந்தவர். அதனால் தான் மருதூர் கோபாலன் மகன் ராமச்சந்திரன் என்னும் முழுப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். அதன் சுருக்கமே எம்.ஜி.ஆர்.,இரண்டரை வயதில் தந்தையை இழந்த எம்.ஜி.ஆர் மற்றும் அவரது சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை வளர்ப்பதற்காக, அம்மா சத்தியபாமா தமிழ்நாடு திரும்பினார். அப்போது கும்பகோணத்தில் உறவினர் வேலு நாயரின் ஆதரவில் தனது இருமகன்களையும் பள்ளியில் சேர்த்தார்,தாய் சத்தியபாமா.,பள்ளியில் படித்துக்கொண்டே பாய்ஸ் நாடகக்கம்பெனியில் சேர்ந்து மேடை ஏறிய எம்.ஜி.ஆர் பின் பள்ளியில் இருந்து விலகி முழு நேர நாடக நடிகரானார். ஆரம்பத்தில் முருகன் மற்றும் குருவாயூரப்பனின் தீவிர பக்தராக இருந்த எம்.ஜி.ஆர் திமுகவில் இணைந்தபின் பகுத்தறிவுவாதியாக செயல்பட்டார்.,ராமச்சந்திரனின் முதல் இருமனைவிகள் உடல்நலக்குறைவால் மறைய மூன்றாவதாக வி.என். ஜானகியை திருமணம் செய்துகொண்டார்.,

திரையில் எம்.ஜி.ஆர்: 

1936ஆம் ஆண்டு, சதி லீலாவதி என்னும் படம் மூலம் நாடக நடிகராக இருந்து சினிமாவில் நடிகராக புரோமோசன் ஆனார், எம்.ஜி.ஆர். 1954ஆம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகியப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவந்த நாயகனாக மாறினார், எம்.ஜி.ஆர். பின் 1972ல் ரிக்‌ஷாக்காரன் திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த படங்களில் மெசேஜ் சொல்வது எம்.ஜி.ஆரின் திரைப்பாணியாக இருந்தது. அதனால் அவர் தமிழ் சினிமாவில் பாமரர்களும் ஏற்றுக்கொள்ளும் நாயகராகத் திகழ்ந்தார். நம்பர் ஒன் நடிகராக மாறினார்.

அரசியலில் எம்.ஜி.ஆர்:

ஆரம்பத்தில் அண்ணாவின் மீது இருந்த ஈர்ப்பு மற்றும் செயல்பாடுகள் காரணமாக திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர். அக்கட்சியில் பொருளாளர் வரை பதவி உயர்வுபெற்றார். அண்ணாவின் மறைவுக்குப் பின், திமுகவுக்கு தலைமையேற்ற கருணாநிதியிடம் இருந்து கட்சியின் நிதி குறித்து கணக்குக்கேட்ட விவகாரத்தில் அக்கட்சியிலிருந்து 1972ஆம் ஆண்டு நீக்கப்பட்டார்.இந்த நீக்கத்திற்குப் பின், எம்.ஜி.ஆரின் விசுவாசியான அனகாபுத்தூர் ராமலிங்கம் தொடங்கிய அண்ணா திமுக கட்சியில், இணைந்த எம்.ஜி.ஆர். பின்னர் அதன் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டார். பின்னர் 1977ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் பெயரில் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தார், எம்.ஜி.ஆர். அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் 144 இடங்களில் வென்று எம்.ஜி.ஆர். 1977ஆம் ஆண்டு முதலமைச்சரானார். பின் 1980ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரையும், அதன்பின் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று டிசம்பர் 24, 1987 சாகும் வரை முதலமைச்சராக இருந்தார், எம்.ஜி.ஆர். ஏறத்தாழ மூன்று முறை முதலமைச்சராக இருந்தார்.

எம்.ஜி.ஆர்,எம்.ஜி.ஆரின் மறைவு: 

திரை வாழ்வில் மட்டுமல்லாமல் பலருக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவக்கூடிய குணம் படைத்த எம்.ஜி.ஆர். 1984ஆம் ஆண்டு முதல் சிறுநீரக செயலிழப்பில் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது நினைவுநாளில் அவர் விட்டுச்சென்ற அதிமுக தொண்டர்களும் அவரது ரசிகர்களும் இந்நாளை துக்கநாளாக அனுசரிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like