1. Home
  2. தமிழ்நாடு

ஊழியர்கள் ஷாக்..!இனி ஐடி ஊழியர்களுக்கு தினமும் 14 மணி நேர வேலை?

Q

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நாட்டின், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப மையமாக, கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் விளங்கி வருகின்றன.இன்போசிஸ், எச்சிஎல், விப்ரோ, ஆக்சென்ச்சர், டிசிஎஸ் உள்பட ஏராளாமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் அதிகளவில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய சமீபத்தில் திட்டமிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, இந்த முடிவை கர்நாடக அரசு கைவிட்டது.

இந்நிலையில் தான் தற்போது பெங்களூர் உள்பட கர்நாடகாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்களில் பணியாளர்களின் தினசரி வேலை நேரத்தை 12 மணிநேரத்தில் இருந்து 12 + 2 என்று மொத்தம் 14 மணிநேரமாக மாற்றம் வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை என்பது கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு சென்றுள்ளது.

அந்த பரிந்துரையில் கர்நாடகாவில் 14 மணிநேர பணி நேரத்தை அமல்படுத்தும் வகையில் கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டம் 1961ல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின் படி 12 + 2 என்ற 14 மணிநேர பணி நேரம் அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ஐடி நிறுவனங்களின் இந்த பரிந்துரையை அரசு ஏற்கும்பட்சசத்தில் அது ஐடி ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும். அதாவது தினமும் அவர்கள் கூடுதலாக 2 மணிநேரம் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும்.

Trending News

Latest News

You May Like